Monday

தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இஸ்ரேல் நாட்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் மூலம் உரம் போடுதல், பசுமைக் குடில்கள் அமைத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதற்காக தமிழக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டிற்கு 17 ந் தேதி (சனிக்கிழமை) அழைத்துச் செல்லப்பட்டனர்.

Wednesday

அலங்கார மீன் வளர்ப்பு / வண்ண மீன் வளர்ப்பு

alangara matrum vanna meen valarppu

வளர்ப்பு மீன்கள்

வளர்ப்பு மீன்கள் இனப்பெருக்கத் தன்மையைப் பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள்பொரி முட்டையிடுவன.முட்டையிடும் மீன்கள் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடங்களில் முட்டையிடுபவை முட்டையைப் புதைத்து வைப்பவை, வாயில் முட்டையைப் பாதுகாப்பவை கூடுகட்டுபவை முட்டையை சுமந்து கொண்டே திரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன.

Thursday

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

உணவு உற்பத்திக்கு அடிப்படையானது விவசாயம். விவசாயத்திற்கு அடிப்படையானது மண். மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம்.  மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல.  அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள்.  அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது.  அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

Sunday

வாரிக் கொடுக்குது வண்ண மீன் வளர்ப்பு

வண்ண மீன் வளர்ப்பு

இன்றைய தேதியில் இந்தியாவின் மிக முக்கியமான வண்ண மீன் வளர்ப்பு மையம் என்றால் அது சென்னைதான்! கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் இரண்டு மடங்காக வளர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சி.
‘நம்மால் எப்படி திடீரென்று மீன் வளர்ப்புக்குப் போகமுடியும்’ என்று யோசிக்கிறீர்களா..?