Wednesday

மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்புக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

வளர்ந்து வரும் நாகரிக உலகில் மனிதன் பல்வேறு நோய்களுக்கு உட்படுகிறான். சுற்றுச்சூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் மேலும் விவசாயத்தில் இரசாயண உரங்கள் மற்றும் நச்சு விளைவிக்க்கூடிய பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்துதலே காரணம். இதற்கு மாற்றாக இயற்கை வேளாண்மைக்கு தேவையான முக்கிய இடுபொருளாக மண்புழு உரம் பயன்படுகிறது. மண்புழு உரம் அதிக அளவில் உற்பத்தி செய்ய விழிப்புணர்வும், பயிற்சிகளும் அவசியமானவை
. இதனைக்கருத்தில் கொண்டு ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பாகவும், தொழில் முனைவோராக மாறவும் மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் உற்பத்தி செய்தல் பற்றி ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் செயல்முறை விளக்கமாக புழு வளர்ப்பு, உரம் தயாரிப்பு, மண்புழு ரகங்கள், தேவையான மூலப்பொருட்கள் போன்றவற்றுடன் செய்து காட்டப்பட்டது. குறிப்பாக மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவையான புழு வகைகள், யூடிரில்லஸ் எக்ஸ்வேட்டஸ் இவைகள் மண்ணில் மேல் மட்டத்திலும், தொட்டிகளிலும் வளர்ந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். சாதாரணமாக 1 டன் மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் 1டிராக்டர் அளவு சாணம் மற்றும் முக்கிய இலை, தழைகள், மரத்தூள் மேலும் மாட்டு கோமியம் இவைகளை பயன்படுத்தி 10நாட்கள் மட்க வைத்து படுக்கை தயார் செய்யவேண்டும். குறைந்த நாட்களில் அதன்பின் 3லிருந்து 5கிலோ வரை வளமான மண்புழு இடவேண்டும். குறைந்த நாட்களில் மண்புழு உரம், மண்புழு மற்றும் மண்புழு திரவம் தயாரிக்கலாம். இதன் மூலம் மாதத்திற்கு 30ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். இந்த ஒருநாள் பயிற்சி முகாமிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர்.ரஞ்சித்சிங் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். கல்பவிருட்ஷக இயக்குநர் செந்தில்குமார் மற்றும் திட்ட அதிகாரி மீனாட்சி சிறப்பான முறையில் மாணவர்களுக்கு பயிற்சியை அளித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை விலங்கியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஒழுங்கு செய்தனர். மேலும் இப்பயிற்சி பெற கீழ்கண்ட முகவரிக்கு தாரளமாய் தொடர்பு கொள்ளலாம்.செந்தில்குமார், இயக்குனர் கல்பவிருட்ஷம், இயற்கை வேளாண்மை தொழில் நுட்பமையம், தென்காசி. அலைபேசி 94424-90038. ஜே.எஸ்.மைக்கேல், விரிவுரையாளர், விலங்கியல் துறை, ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி, ஆழ்வார்குறிச்சி, அலைபேசி 9345096842
Source:http://www.dinamalar.com/news_detail.asp?id=300480

No comments: